உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டம் வினாடி - வினா அரையிறுதி போட்டி

பட்டம் வினாடி - வினா அரையிறுதி போட்டி

புதுச்சேரி பெத்தி செமினேர் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் இதழின் 'வினாடி-வினா' அரையிறுதி போட்டி நேற்று நடந்தது.பள்ளியில் நடந்த தினமலர் பட்டம் இதழின் முதல் நிலை தேர்வில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 3,000 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வில் முதல் 8 இடங்களை பிடித்த மாணவர் குழுக்களுக்கான வினாடி வினாவிற்கான அரையிறுதிப் போட்டியை விஜய் நடத்தினார்.இப்போட்டியில், 10ம் வகுப்பை சேர்ந்த ஷர்வேஷ் ராஜா, கரும்பாயிரம் முதல் இடத்தையும், 10 மற்றும் 9ம் வகுப்பை சேர்ந்த சத்ரேஷ், பெஞ்சமின் போர்ட் லுாயிஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர் குழுக்களுக்கு பள்ளி முதல்வர் தேவதாஸ் பாராட்டி பரிசுகளை வழங்கினார். போட்டிகளை வேதியியல் துறைத் தலைவர் பீட்டர் ஜார்ஜ், ஆசிரியர் ஜான் பிரிட்டோ ஆகியோர் ஒருங்கிணைத்து வழி நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ