உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

திருபுவனை : மதகடிப்பட்டு அருகே தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துமனை வளாகத்தில் பைக் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். விழுப்புரத்தை சேர்ந்தவர் கோபிநாதன் 39; கடந்த 26ம் தேதி மாலை 4;00 மணிக்கு புதுச்சேரி மதகடிப்பட்டு அருகே கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குளவினாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் தனது பைக்கை நிறுத்தியுள்ளார்.பின்னர் வந்து பார்த்தபோது பைக் காணாமல் போனதால் கோபிநாதன் அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை