உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் நபரிடம் ரூ.1 லட்சம் மோசடி

வில்லியனுார் நபரிடம் ரூ.1 லட்சம் மோசடி

புதுச்சேரி: ஆன்லைனில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, 1 லட்சம் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனுாரை சேர்ந்தவர் குமார். இவரை தொடர்பு கொண்ட நபர், ஆன்லைனில் முதலீடு செய்தால், பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி, அவர் 1 லட்சம் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தார்.லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி, ஒரு மொபைல் எண்ணில் இருந்து வீடியோ கால் வந்தது.அதனை ஆன் செய்து பேசிய போது, திடீரென ஆபாசமாக பெண் ஒருவர் நின்று கொண்டு பேசினார். அதனை அடுத்து, அப்பெண் ஆபாசமாக நின்று வீடியோ பேசிய காலை ரெக்கார்டு செய்து, அவருக்கு அனுப்பினார். பின்னர் பணம் கேட்டு மிரட்டினார்.பணம் தரவில்லை என்றால், வீடியோ காலை சமூக வளைதளத்தில் பதிவு செய்வதாக மிரட்டி வருகிறார்.இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை