உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., தொகுதி தலைவர் அறிமுக கூட்டம்

பா.ஜ., தொகுதி தலைவர் அறிமுக கூட்டம்

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதி பா.ஜ., தலைவர் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது.புதுச்சேரி மாநில பா.ஜ., அமைப்பு தேர்தல் முடிந்து புதிய தொகுதி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி அரியாங்குப்பம் மாவட்டம், நெட்டப்பாக்கம் தொகுதி பா.ஜ., தொகுதி தலைவர் அறிமுக கூட்டம் ஏரிப்பாக்கம் தனியார் திருமண நிலையத்தில் நடந்தது.நெட்டப்பாக்கம் தொகுதி தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட துணை தலைவர் துரைசாமி வரவேற்றார். பா.ஜ., நிர்வாகிகள் அன்பழகன், சிவக்கொழுந்து, வெங்கடேசன், ஜெய்னா, விஸ்வமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில், மாநில, மாவட்ட, தொகுதி மற்றும் அனைத்து பிரிவு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னாள் பொதுச்செயலாளர் துரைராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ