உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ.,‘சேவை உறுதிமொழி இயக்கம்’

பா.ஜ.,‘சேவை உறுதிமொழி இயக்கம்’

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திரமோடியின் 25 ஆண்டுகால சேவையை மக்களிடம் கொண்டு செல்லும் ‘சேவை உறுதிமொழி இயக்கம்’ தொடர்பான இரண்டாவது ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பிரதமர் மோடியின் 25 ஆண்டு கால சேவையை மக்களிடம் கொண்டு செல்ல‘சேவை உறுதிமொழி இயக்கம்’ வரும் 17ம் முதல் அடுத்த மாதம் 17ம் தேதி வரை நாடு முழுதும் நடத்த பா.ஜ., தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புதுச்சேரியில் இந்த இயக்கத்தை செயல்படுத்த மாநில, மாவட்ட மற்றும் தொகுதி அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் ஆலோசனை கூட்டம், பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., மீனாட்சிசுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் செல்வம், தசரத், மாநில பொதுச்செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமிநாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், அசோக்பாபு, தங்கவிக்ரமன் மற்றும் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.    


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ