உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

திருக்கனுார்: பிரதமர் மோடி குறித்து அவதுாறு பேசியதாக காங்., எம்.பி., ராகுலை கண்டித்து, பா.ஜ., சார்பில் திருக்கனுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வில்லியனுார் மாவட்ட ஓ.பி.சி., அணி சார்பில் நடந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சோம்பட்டு சிவா, செயலாளர் ஜெயக்குமார், தொகுதி தலைவர் வேதாச்சலம், மண்டல பொறுப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.ஓ.பி.சி., மாநில செயலாளர் கலையரசன், தொகுதி தலைவர் லோகேஸ்வரன், மாவட்ட செயலாளர் சுரேஷ், மாநில வர்த்தக பிரிவு தலைவர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடியை அவதுாறாக பேசிய ராகுல் எம்.பி., மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். தொடர்ந்து ராகுல் உருவ பொம்பையை எரிக்க முயன்றனர். திருக்கனுார் போலீசார் தடுத்து, உருவ பொம்மையை அப்புறப் படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை