உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடலில் மாயமான மாணவர் உடல் இரு நாட்களுக்கு பின் மீட்பு

கடலில் மாயமான மாணவர் உடல் இரு நாட்களுக்கு பின் மீட்பு

காரைக்கால்: காரைக்கால் கடலில் மூழ்கி மாயமான மாணவர் உடல் இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று மீட்கப்பட்டது.தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பாலக்கரை அரசு கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் 14 பேர், கடந்த 30ம் தேதி காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.அப்போது, கடலில் இறங்கி குளித்த திருநாகேஸ்வரம் மாணவி ஹேமாமாலினி,20; திப்பிராஜபுரம் ரித்தன்யா 18, ஆகியோர் அலையில் சிக்கினர். அவர்களை சக மாணவர்கள் புகழேந்தி, அபிலாஷ், ஜெகதீஸ்வரன், மைக்கல் ஆகியோர் கடலில் இறங்கி மீட்க முயன்றனர். ஆனால், அவர்களும் அலையில் சிக்கி உயிருக்கு போராடினர்.அதனைக் கண்ட அங்கிருந்த மீனவர்கள் கடலில் இறங்கி, மாணவர்கள் மைக்கேல், புகழேந்தி, மாணவி ரித்தன்யா ஆகியோரை மீட்டனர். ஹேமாமாலினி இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.மாணவர்கள் ஜெகதீஸ்வரன், அபிலாஷ் மாயமாகினர். அவர்களில் ஜெகதீஷ் உடல் நேற்று முன்தினம் கரை ஒதுங்கியது. அபிலாஷ்,20; உடல் நேற்று கீழவாஞ்சூர், பட்டினச்சேரி கடற்கரையில் ஒதுங்கியது.காரைக்கால் போலீசார் விரைந்து சென்று அபிலாஷ், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை