மேலும் செய்திகள்
வீட்டின் ஜன்னலை உடைத்து 30 சவரன் நகை திருட்டு
23-Jan-2025
புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் வீட்டு ஜன்னல் உடைத்து ரூ. 40 லட்சம் மதிப்பிலான தங்கம், வைரம் நகைகள் திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ரெட்டியார்பாளையம், விவேகானந்தா நகர் விரிவாக்கம் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன், 67; விழுப்புரத்தில் டயர் ரீரேடிங் கம்பெனி நடத்தி வந்தார். வயது மூப்பு காரணமாக தொழிலை விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய ஒரே மகள் ஷாலினியை சென்னையில் திருமணம் செய்து கொடுத்து விட்டு, வீட்டில் ஸ்ரீதரன், அவரது மனைவி சூரியபாலா மட்டும் இருந்து வருகின்றனர். கடந்த 16ம் தேதி காலை சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதற்காக தம்பதி இருவரும் வீட்டை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை 6.30 மணியளவில் எதிர் வீட்டைச் சேர்ந்த ரவிசங்கர், ஸ்ரீதரனை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டு ஜன்னல் உடைத்து மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீதரன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்து ரூ. 40 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகள் திருடு போனது தெரியவந்தது. ஸ்ரீதரன் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Jan-2025