உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.எஸ்சி., நர்சிங் 29ம் தேதி நுழைவு தேர்வு 

பி.எஸ்சி., நர்சிங் 29ம் தேதி நுழைவு தேர்வு 

புதுச்சேரி : பி.எஸ்சி (நர்சிங்) சென் டாக் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான நுழைவுத் தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:2025-26ம் ஆண்டுக்கான பி.எஸ்சி., (நர்சிங்) சென்டாக் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான நுழைவுத் தேர்வு வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. புதுச்சேரியில் 5 மையங்களிலும், காரைக்காலில் 2 மையங்களிலும், மாகி, ஏனாம் தலா 1 மையங் களிலும் தேர்வுகள் நடைபெற உள்ளது.விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை (அனுமதி சீட்டு) https://www.centacpuducherry.inஎன்ற இணையதளத்தில் உள்நுழைவு டேஷ்போர்டை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும், விவரங்கள் மற்றும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 0413-2229355 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி