உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்

வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடந்தது.வணிகர் கூட்டமைப்பு தலைவர் பாபு சீனுவாசன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனம் பிராந்திய வணிகர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற, சிவசங்கரன் எம்.எல்.ஏ., கூறுகையில், 'இந்திய ராணுவ வீரர்கள் வீரத்தை போற்றும் வகையில் நாளை 29ம் தேதி ஆப்ரேஷன் சிந்துார் வெற்றி கொண்டாடப்படுகிறது. அதற்காக நாளை மாலை 3:00 மணியளவில் வணிகர்கள் கூட்டமைப்பில் உள்ள 100 சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் வீர வணக்க ஊர்வம் நடக்கிறது. இந்த ஊர்வலம் ஏ.எப்.டி., மைதானத்தில் துவங்கி மிஷன் வீதி வழியாக சென்று மாதா கோவில் அருகில் முடிவடைகிறது. கூட்டமைப்பில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி