மேலும் செய்திகள்
-பேனர்: ஜாக்பாட்
6 minutes ago
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
29 minutes ago
சைபர் கிரைம் கும்பல் ரூ.23 ஆயிரம் மோசடி
29 minutes ago
மின்தடை
29 minutes ago
சாலை படுமோசம்
1 hour(s) ago
காரைக்கால் : கேபிள் டிவி ஆபரேட்டர் சவுக்கை தோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காரைக்கால், திருநள்ளாறு, தேனுார் ராஜிவ்நகரை சேர்ந்தவர் பிலோமின்ராஜ், 35; கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது மனைவி கனிமொழி தனியார் பள்ளி ஆசிரியர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு வெளியே சென்ற, பிலோமின்ராஜ் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை அக்கம்பேட்டை கடற்கரை பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் பிலோமின்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.தகவலறிந்த கோட்டுச்சேரி போலீசார் பிலோமின்ராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, பிலோமின்ராஜ் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப் பதிந்து, இறப்பிற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். உடலை வாங்க மறுப்பு
நேற்று மதியம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், பிலோமின்ராஜின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் குலோத்துங்கன், பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும், அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை ஏற்று, பிலோமின்ராஜ் உடலை பெற்றுக் கொண்டனர்.
6 minutes ago
29 minutes ago
29 minutes ago
29 minutes ago
1 hour(s) ago