உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாட்டு வண்டியில் அழைப்பு: பிரான்ஸ் மாப்பிள்ளை குஷி

மாட்டு வண்டியில் அழைப்பு: பிரான்ஸ் மாப்பிள்ளை குஷி

அரியாங்குப்பம் : புதுச்சேரியில், மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து பிரான்ஸ் மாப்பிள்ளை திருமணம் செய்து கொண்டதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வாழ்த்தினர்.பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சைலீவ்-பாலின் ஜோடிக்கு காதல் மலர்ந்து, இருவரும், 'குட்டி பிரான்ஸ்' புதுச்சேரிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் வந்தனர். தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள லகூன் சரோவர் சொகுசு விடுதியில் நண்பர்களுடன் தங்கினர்.தமிழர்களின் திருமண முறைகளை சைலீவ் ஆர்வமாக கேட்டறிந்தார். அப்போது, தமிழர்களின் வாழ்வியலில் மாட்டுவண்டி முக்கிய இடத்தை பிடித்திருப்பதை அறிந்து கொண்ட அவர், மாப்பிள்ளை அழைப்பை மாட்டு வண்டியில் நடத்தி, தனது காதலியை திருமண செய்து கொள்ள விரும்பினார்.அதற்கு இரு வீட்டாரும் சம்மதிக்க, அடுத்து மாப்பிள்ளை அழைப்பு தடபுடலாக நடந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் முக்கிய வீதிகள் வழியாக மங்கள வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை சைலீவ் அழைத்து வரப்பட்டார். அப்போது, மாப்பிள்ளை சைலீவ், மாட்டு வண்டியில் ஆனந்தமாக நடனம் ஆடி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.சொகுசு விடுதிக்குள் மாப்பிள்ளை ஊர்வலமாக வந்ததும், தமிழர்களின் பாரம்பரிய முறையில், இருவரும் மாலை மாற்றி கொண்டு கெட்டிமேளம் முழங்க திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடிந்த பின்னர், வாழை இலைபோட்டு விருந்து உபசரிப்பு நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில், வெளி நாட்டினர் ஸ்பூன்களை தவிர்த்து கைகளால் சாப்பிட்டனர்.மணமகள் பாலின், கேரளாவில் பிறந்து, தமிழ் கற்று தனது குடும்பத்தோடு பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். அதனால், பிரான்ஸ் மாப்பிள்ளை சைலீவிற்கு, தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.திருமணம் முடிந்து புதுமண ஜோடி மாட்டு வண்டியில் மீண்டும் ஒரு ரவுண்ட் வந்தனர். அந்த நேரத்தில், 'வண்டி மாடு எட்டு வெச்சு முன்னே போவுதம்மா... வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா...' என்ற டைமிங் பாடல்களை ஒலிக்கவிட அந்த இடமே மகிழ்ச்சியில் குதுாகலமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை