உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கனரா வங்கி ஊழியர்கள் கடற்கரையில் துாய்மை பணி

கனரா வங்கி ஊழியர்கள் கடற்கரையில் துாய்மை பணி

புதுச்சேரி, : புதுச்சேரி கனரா வங்கி மண்டலம் அலுவலகம் சார்பில், ஊழியர்கள் துாய்மை பணி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.காந்திஜெயந்தி தினத்தையொட்டி, புதுச்சேரி கனரா வங்கி மண்டலம் அலுவலம் சார்பில், வங்கி ஊழியர்கள் கடற்கரை சாலையில் நேற்று துாய்மை பணி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை, மண்டல மேலாளர் சதிஷ்குமார் தலைமை தாங்கி துாய்மை பணியை துவக்கி வைத்தார்.கோட்ட மேலாளர்கள் சுதர்சன், அரவிந்தன், விஸ்வபாரத், புதுச்சேரி வங்கி மேலாளர்கள், ஊழியர்கள் பங்கேற்று , கடற்கரையில் பகுதியில் துாய்மை பணி செய்தனர். தொடர்ந்து, துாய்மை செய்வது குறித்து, பொதுமக்களிடம் துாய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை