உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜை

புதுச்சேரி : சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. புதுச்சேரி, சாரம், நாகமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 3ம் வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு 108 திரு விளக்கு பூஜை நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிப்பட்டனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்ப அபிேஷக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன், குருக்கள் சிவராமன், மணிகண்டன், உதவி அர்ச்சகர் முத்துகுமாரசாமி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி