உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் மீது கார் மோதல்: 2 குழந்தை உட்பட 4 பேர் காயம்

பைக் மீது கார் மோதல்: 2 குழந்தை உட்பட 4 பேர் காயம்

வில்லியனுார்: வில்லியனுார் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். விழுப்புரம் பனையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 38; தனியார் கம்பெனி ஊழியர். இவர் தனது மனைவி கவுசல்யா, 32 மற்றும் இரண்டு, மற்றும் மூன்று வயது குழந்தைகளை பைக்கில் அழைத்துக் கொண்டு நேற்று மாலை 6:45 மணிக்கு புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு வந்தார். அரும்பார்த்தபுரம் மேம்பலாம் கீழே சென்று கொண்டிருந்த போது, புதுச்சேரியில் இருந்து வில்லியனுார் நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு, ஜிப்மருக்கு அனுப்பினர். விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ