உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொலை மிரட்டல் விடுத்த தாய், மகன் மீது வழக்கு

கொலை மிரட்டல் விடுத்த தாய், மகன் மீது வழக்கு

புதுச்சேரி: கட்டுமான பணியை நிறுத்தி, கொலை மிரட்டல் விடுத்த தாய், மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கதிர்காமம் பெரியார் நகரை சேர்ந்தவர் முத்துகுமரன், 49; இவர் உழவர்கரை கணபதி நகரில், உள்ள இடத்தில் வீடு கட்டுவதற்காக கட்டுமான பணியை துவக்கினார். இந்நிலையில் முத்திரையர்பாளையத்தை சேர்ந்த தனலட்சுமி, அவரது மகன் ஸ்ரீதர் இருவரும் நேற்று முன்தினம் இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என அவரிடம் கூறி கட்டுமான பணியை நிறுத்தினர். இதனால் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த, தாய் ,மகன் இருவரும், முத்துகுமரனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார், தனலட்சுமி, அவரது மகன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ