உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி இன்சூரன்ஸ் பாலிசி லாரி உரிமையாளர் மீது வழக்கு

போலி இன்சூரன்ஸ் பாலிசி லாரி உரிமையாளர் மீது வழக்கு

புதுச்சேரி : போலி இன்சூரன்ஸ் பாலிசி மூலம் ரூ.2 கோடி விபத்து காப்பீடு பெற முயன்றதாக லாரி உரிமையாளர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருக்கனுார், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பாமா, 45: புதுச்சேரி அரசு மருத்துவமனை செவிலியர். இவர், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி தனது மகனுடன் பைக்கில், திருக்கனுார் டி.வி.மலை ரோடு வழியாக வந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது. அதில், பாமா சம்பவ இடத்திலேயே இறந்தார்.விபத்து குறித்து மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விபத்தில் இறந்த அரசு செவிலியர் பாமாவின் குடும்பத்தினர் ரூ.2 கோடி இழப்பீடு கோரி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இதற்கிடையே, வழக்கில் தாக்கல் செய்த விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரியின் இன்சூரன்ஸ் பாலிசியை, இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அந்த பாலிசி தங்கள் நிறுவனத்துடையது இல்லை என்பதும், போலியாக தயாரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்நிறுவன உதவி துணை தலைவர் ராஜேஷ், தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலி பாலிசியை தயார் செய்தவர் மீது கிரிமினில் நடவடிக்கை எடுக்க கோரி, புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், டிப்பர் லாரியின் உரிமையாளர் விழுப்புரம், அய்யனாம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மீது சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை