மாணவியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
புதுச்சேரி: சுல்தான்பேட்டையை சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர் முத்தியால்பேட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லுாரியில் படித்து வருகிறார். அவர் பகுதி நேரமாக மிஷன் வீதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர், அதே பகுதியை சேர்ந்த முகமதுயூசப், 21, என்ற கல்லுாரி மாணவரை காதலித்து வந்தார். அந்த மாணவரின் செலவுக்காக மாணவி அவ்வப்போது பணம் கொடுத்து வந்தார். மாணவர் அடிக்கடி பணம்கேட்பதாலும், அவரின் நடத்தை சரியில்லை என்பதாலும் மாணவி அந்த மாணவரிட மிருந்து விலக ஆரம்பித்தார். இந்நிலையில் நேற்று கல்லுாரி முடித்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த மாணவியை மூலக்குளம் அருகே வழிமறித்த முகமதுயூசப் மாணவியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பணம் தர மறுத்ததால், மாணவியின் கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.