மேலும் செய்திகள்
பொது இடத்தில் தகராறு; 4 பேர் கைது
18-Jan-2025
திருக்கனுார்,; பெண்களை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.சந்தை புதுக்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வி, 48. இவர் நேற்று முன்தினம் தனது தாய் ஆனந்தாயியுடன், வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கிடந்த காய்ந்த இலைகளை கூட்டி, தீ வைத்து எரித்தார்.அங்கு குடிபோதையில் வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ரகு என்பவர், குப்பைகளை இங்கே ஏன் கொளுத்தினீர்கள் என கேட்டு தகராறில் ஈடுபட்டு, இருவரையும் தாக்கினார். இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்துவிசாரித்து வருகின்றனர்.
18-Jan-2025