உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி ஆவணம் தயாரித்த 6 மீது வழக்கு பதிவு

போலி ஆவணம் தயாரித்த 6 மீது வழக்கு பதிவு

புதுச்சேரி : காலாப்பட்டு கேண்டீன் வீதியை சேர்ந்தவர் கோதண்டம். இவரது மகன் பிரேம்ராஜ், 40; இவருக்கு சொந்தமான நிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ளது.இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன், செல்லப்பன், ராணி உட்பட 6 பேர் போலி ஆவணம் தயாரித்து பத்திர பதிவு செய்துள்ளனர்.இதுபற்றி பிரேம்ராஜ், கடந்த 2021ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த கோர்ட், பிரேம்ராஜிக்கு சொந்தமான நிலம் என உறுதிசெய்தது.அதையடுத்து, போலி ஆவணம் தயாரித்த ரங்கநாதன் உள்ளிட்ட 6 பேர் மீது விசாரணை செய்ய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, 6 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை