உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரி மாணவரை வெட்டிய 6 பேர் மீது வழக்குப் பதிவு

கல்லுாரி மாணவரை வெட்டிய 6 பேர் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி : கல்லுாரி மாணவரை கத்தியால் வெட்டிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, பாவாணர் நகரை சேர்ந்தவர் சிவா மகன் செல்வகுமார், 20; தாகூர் அரசு கல்லுாரியில் பி.பி.ஏ., 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது பிறந்த நாளுக்காக அவரது நண்பர்கள் ராஜராஜேஸ்வரி கோவில் எதிரே பேனர் வைத்தனர். அதன்பின், அந்த பேனரை கிழித்துவிட்டு, அதேப் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, சிவா மற்றும் சிலர் அவர்களின் நண்பரான ரவியின் திருமணத்திற்கான பேனர் வைத்தனர். இதனால், இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு, உள்ளது. செல்வகுமார் தனது உறவினர் முருகன், 29; என்பவரடன் நேற்று முன்தினம் பாவாணர் நகர் வழியாக சென்றார். அங்கு பைக்கில் வந்த சத்தியமூர்த்தி, சிவா, மோகன், ஜெயராஜ், அனிதா நகரை சேர்ந்த சுமன், வேல்ராம்பட்டைச் சே ர்ந்த தினேஷ் ஆகியோர் இருவரையும் கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த செல்வகுமார், முருகன் ஆகியோரை அருகிலிருந்த வர்கள் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் சத்தியமூர்த்தி, சிவா, மோகன், ஜெயராஜ், சுமன், தினேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை