| ADDED : செப் 11, 2026 07:32 PM
புதுச்சேரி: நீட் அல்லாத படிப்புகளுக்கு புதிதாக விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது ரேங்க் நிலையை அறிந்து கொள்ளலாம் என சென்டாக் அறிவித்துள்ளது. நீட் அல்லாத தொழிற்கல்வி படிப்புகள் மற்றும் இளநிலை கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு துணைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு புதிதாக விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் மற்றும் தகவல்கள் சரிபார்த்து அதன் விவரங்களை சென்டாக் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிலையை மாணவர்கள் தங்களது பதிவு விவரங்கள் மூலம் www.centacpuducherry.inஎன்ற இணையதளத்தின் டேஷ்போர்டு வாயிலாக அறிந்து கொள்ளலாம். சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது திருத்தங்கள் இருப்பின், மாணவர்கள் தங்களின் டேஷ்போர்டில் உள்ள கிரீவன்ஸ் என்ற லிங்க் மூலம் இன்று 12ம் தேதி காலை 11:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தைப் பார்வையிடலாம். 0413-2655570 என்ற சென்டாக் உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.