உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுசேவை மையத்தில் சான்றிதழ்

பொதுசேவை மையத்தில் சான்றிதழ்

புதுச்சேரி, : பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பொதுசேவை மையங்களில் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக உழவர்கரை நகராட்சி தெரிவித்துள்ளது.ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உழவர்கரை நகராட்சி பகுதியில் பிறப்பு, இறப்பு நிகழ்வுகள் பதியப்பட்டு நகராட்சி மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற பொதுமக்கள் அதிக அளவில் நகராட்சிக்கு வருவதால், அவர்கள் நலன் கருதி தங்கள் அருகில் உள்ள பொதுசேவை மையங்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள கடந்த ஆண்டு ஆவண செய்யப்பட்டது.இருந்தும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை அணுகுவது வாடிக்கையாக உள்ளது.எனவே, பொதுமக்கள் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை, ரெட்டியார்பாளையம், அஜிஸ் நகர் மார்க்கெட் வளாகம், எல்லப்பிள்ளைச்சாவடி, சமூக நலத்துறை வளாகம், அரும்பார்த்தபுரம் பத்மா வதி மருத்துவமனை அரு கில், வழுதாவூர் சாலை, கதிர்காமம், வீமகவுண்டன்பாளையம் ஆதிதிரா விடர் நலம் மற்றும் பழங்குடியினர் துறை, திலாஸ்பேட்டை, காந்தி நகர் முதல் குறுக்கு தெரு.தர்மாபுரி வழுவாவூர் மெயின்ரோடு, தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை வளாகம், வி.வி.பி.நகர் காமராஜர் சாலை, பாக்கமுடையான்பேட் லாஸ்பேட்டை மெயின்ரோடு, சாரம் என்.எஸ்.கே., வளாகம், ரெயின்போ நகர் கிருஷ்ணா நகர் மெயின்ரோடு, பெத்துசெட்டிபேட்டை மாரியம்மன் கோவில் வீதி, குறிஞ்சி நகர் முதன்மை சாலை, பெரியக்காலாப்பட்டு எம்.எல்.ஏ., அலுவலகம் எதிரில், கனகசெட்டிக்குளம் ஜெயலட்சுமி பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள பொதுசேவை மையங்களில் பெற்றுக் கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ