முதல்வர் பிறந்த நாள் கவிதை நுால் வெளியீடு
புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமியின் 75வது பிறந்த நாள் நிறைவையொட்டி, கவிதை நுால் வெளியீட்டு விழா நடந்தது. புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி சிறகம் சார்பில், புதுச்சேரி சட்டசபையில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நடந்த விழாவில், சபாநாயகர் செல்வம், கவிதை நுாலினை வெளியிட்டார். அதனை அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, பாஸ்கர் எம்.எல்.ஏ., தமிழ் வளர்ச்சி சிறகத்தின் சிறப்புப்பணி அதிகாரி வாசுகி ராஜாராம், தமிழ் அறிஞர்கள் மற்றும் கவிஞர்கள் பெற்றுக் கொண்டனர்.