உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மா.கம்யூ., நகரக்குழு 24 வது மாநாடு

மா.கம்யூ., நகரக்குழு 24 வது மாநாடு

புதுச்சேரி, : புதுச்சேரி நகரக்குழு மா.கம்யூ., சார்பில் 24வது மாநாடு குயவர்பாளையம் தனியார் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது.மாநில குழு உறுப்பினர் சரவணன் வரவேற்றார். நகர செயலாளர் மதிவாணன் கட்சியின் மூலம் நடந்த பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி வரவு, செலவு கணக்கு அறிக்கையைசமர்ப்பித்தார்.நிர்வாகிகள் லிங்கேசவேலு, வீரமணிகண்டன், ரஞ்சித்குமார் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.மாநில குழு உறுப்பினர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், பிரபுராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மாநில செயலாளர் ராஜாங்கம் சிறப்புரை ஆற்றினார்.மணவாளன் நன்றி கூறினார்.முன்னதாக, காமராஜர் சிலையில் இருந் திருமண மண்டபம் வரை மா.கம்யூ., நிர்வாகிகள் பேரணியாக சென்றனர். பேரணியை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை