மேலும் செய்திகள்
மணவெளியில் போர்வெல் அமைக்க ஆணையர் ஆய்வு
08-Nov-2024
திருக்கனுார்; புதுச்சேரியில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் குப்பைகள் தனியார் நிறுவனங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மண்ணடிபட்டு தொகுதி கூனிச்சம்பட்டு பகுதியில் சில ஊழியர்கள் தேவையில்லாத இடங்களில் குப்பைகளுடன் மண்ணை அள்ளுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், குப்பைகள் அகற்றும் தனியார் நிறுவன மேலாளர் விஸ்வநாதன் ஆகியோர் அப்பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, பணியில் இருந்த ஊழியர்களை அழைத்து, தேவையில்லாத இடங்களில் குப்பைகளை அகற்றக் கூடாது. பொதுமக்கள் யாரேனும், வீடுகள், வணிக நிறுவனங்கள் அல்லாத தனியார் இடத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வலியுறுத்தினால், நிறுவனத்திடம் தெரிவித்து கொம்யூன் அனுமதியுடன் அப்புறப்படுத்த வேண்டும் என, ஆணையர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், பிரச்னைக்குரிய ஊழியர்களை வேறு பகுதிக்கு மாற்றி நடவடிக்கை எடுத்தனர். உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன் உடனிருந்தார்.
08-Nov-2024