பனை மரங்களை எரித்த இடத்தில் சமூக அமைப்பினர் உறுதிமொழி
அரியாங்குப்பம்: பனை மரங்களை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சமூக அமைப்பினர், மாலை அணிவித்து, உறுதிமொழி எடுத்தனர்.தவளக்குப்பம் அடுத்த, புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன், 10க்கும் மேற்பட்ட பனை மரங்களை தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், பனை விதைகளை நட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், பூரணாங்குப்பத்தை சேர்ந்த தனசுந்தரம்மாள் சாரிடபுள் சொசைட்டி நிறுவனர் ஆனந்த் மற்றும் சமூக அமைப்பினர், தீ வைத்து எரிக்கப்பட்ட அந்த இடத்தில், அங்கிருந்து பனை மரத்திற்கு மாலை அணிவித்து, பனை மரங்களை அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உறுதிமொழி எடுத்தனர்.