உள்ளூர் செய்திகள்

புகார்பெட்டி 

போக்குவரத்திற்கு இடையூறு

வில்லியனுார் பைபாஸ் சாலை டீ கடை எதிரில்பள்ளம் சரிசெய்ய கொட்டிய கான்கீரீட் கலவை கத்தி போல மாறி உள்ளது.சிவபாலன், புதுச்சேரி.

குண்டும் குழியுமான சாலை

திலாஸ்பேட்டை கனகன் ஏரி சாலை குண்டும்குழியுமாக படுமோசமாக உள்ளது.பாலாஜி, புதுச்சேரி.

சாலையில் இடையூறு

சுல்தான்பேட்டை சாலையில் இரு புறத்தில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைத்திருப்பதால், வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.குருமூர்த்தி, வில்லியனுார்.

சாலையில் பள்ளம்

தேங்காய்த்திட்டு மெயின்ரோட்டில் கேபிள் புதைக்க தோண்டிய பள்ளங்கள் மூடி சாலைஅமைக்கப்படவில்லை.மணிகண்டன், தேங்காய்த்திட்டு.

சாலை ஆக்கிரமிப்பு

வேல்ராம்பாட்டு செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டியுள்ளதால் சாலையின் அகலம் குறைந்துவிட்டது.ஜெயமாலா, புதுச்சேரி.

மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை எதிரில் 4 வழிச்சாலையை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்.அன்பரசன், அரியூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R Saravanan
ஏப் 03, 2024 14:50

அருப்புக்கோட்டையில் வருடம் தோறும் நடைபெறும் பொருட்காட்சி இந்த வருடம் ஆளும்கட்சியினரின் தலையீடு காரணமாக நடைபெறவில்லை பொருட்காட்சி நடைபெறாதது குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மிகவும் அவமானகரமான செயலாக உள்ளது இதனால் வரும் மக்களவை தேர்தலில் இலட்சக்கணக்கான வாக்குகள் ஆளும்கட்சியினருக்கு எதிராக அமைய போகிறது


முக்கிய வீடியோ