துர்நாற்றம் வீசுகிறது
அரும்பார்த்தபுரம், முத்துப்பிள்ளைபாளையம், தக்கக்குட்டை வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.அன்பழகன்,அரும்பார்த்தபுரம். கொசுக்கள் அதிகரிப்பு
சோரியாங்குப்பம், தெற்கு தெருவில், கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கொசு உற்பத்தி அதிகமாகி வருகிறது.பெரியண்ணன்,சோரியாங்குப்பம். போக்குவரத்திற்கு இடையூறு
லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர் 13வது குறுக்கு தெருவில், வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.ஜோஸ்,லாஸ்பேட்டை. தெரு நாய்களால் விபத்து
உப்பளம் சாலையில் தெரு நாய்கள் சுற்றி திரிவதால், வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.மணி,உப்பளம். ைஹமாஸ் எரியுமா?
தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலை, தெப்பக்குளம் அருகில் ஹைமாஸ் விளக்குள் எரியாமல் இருப்பதால், அப்பகுதியில் இரவில் வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது.பாரதி, தவளக்குப்பம்.