உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவிகளுக்கான சிலம்பம் பயிற்சி நிறைவு

மாணவிகளுக்கான சிலம்பம் பயிற்சி நிறைவு

திருக்கனுார் : செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்புக் கலை சிலம்பம் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது.ஆசிரியர் ஜான் பெந்தகொஸ்த் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை அனிதா தலைமை தாங்கினார். விழாவில், முதன்மைக் கல்வி அலுவலர் தனசெல்வன் நேரு கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.இதில், தற்காப்பு கலை சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவிகள் பயிற்சியாளர் அரவிந்த் முன்னிலையில், செயல்முறை விளக்கம் அளித்தனர்.ஆசிரியை ராஜேஸ்வரி தொகுத்து வழங்கினார். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் துரை, பிரபாகரன் மற்றும் அனிதா ஆகியோர் செய்திருந்தனர்.ஆசிரியர் முரளிதரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ