உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஓட்டு திருட்டை கண்டித்து காங்.,2.70 லட்சம் கையெழுத்து

 ஓட்டு திருட்டை கண்டித்து காங்.,2.70 லட்சம் கையெழுத்து

புதுச்சேரி: ஓட்டு திருட்டை கண்டித்து காங்., சார்பில், 2.70 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்ட படிவங்களை, டில்லியில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநில காங்., துணைத் தலைவர் அனந்தராமன் தலைமையில், ஓட்டுத் திருட்டுக்கு எதிராக, கையெழுத்து இயக்கம் மூலம், புதுச்சேரி சட்டசபை தொகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் இருந்து, 2.70 லட்சம் கையெழுத்துக்கள் வாங்கப்பட்டன. பெறப்பட்ட படிவங்கள், புதுச்சேரி காங்., கட்சி அலுவலகத்தில் இருந்து டில்லியில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மகளிர் காங்., தலைவி நிஷா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்