உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெண்களுக்கு தையல் இயந்திரம் காங்., செயலாளர் வழங்கல்

 பெண்களுக்கு தையல் இயந்திரம் காங்., செயலாளர் வழங்கல்

புதுச்சேரி: முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. நுாறு அடி சாலையில் உள்ள அவரது சிலைக்கு காங்., நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். பின், காங்., தலைமை அலுவலகத்தில் அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்திராகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்களை மாநில காங்.,செயலாளரும், ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளருமான குமரன் தனது சொந்த செலவில் வழங்கினார். நிகழ்ச்சியில், தொகுதி நிர்வாகிகள் மனோகர், முரளி, மோகனசுந்தரம், குமார், தினகரன், சல்மான், பதான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை