உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டாசு விற்பனையில் ரூ.70 லட்சம் லாபம் ஈட்டிய கான்பெட் நிறுவனம்

பட்டாசு விற்பனையில் ரூ.70 லட்சம் லாபம் ஈட்டிய கான்பெட் நிறுவனம்

தட்டாஞ்சாவடியில் உள்ள கான்பெட் கூட்டுறவு நிறுவனம் சார்பில், கடந்தாண்டு முதல் தீபாவளி சிறப்பு அங்காடியில் பட்டாசு விற்பனை செய்து வருகிறது. இதற்கு தேவையான பட்டாசுகளை புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பட்டாசு விற்பனையாளரிடமிருந்து முன் பணம் தராமல் குறிப்பிட்ட சதவீத கமிஷன் தொகை வைத்து பிரபல நிறுவன பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்தது. இதில், விற்காத பட்டாசுகளை அந்த விற்பனையாளரே எடுத்துக் கொள்ள வேண்டும். கான்பெட்டிற்கு தரவேண்டிய கமிஷன் தொகையை மட்டும் எடுத்துக் கொண்டு அசல் தொகையை விற்பனையாளருக்கு வழங்கியது. கடந்த ஆண்டு 50 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. அதேபோன்று இந்த ஆண்டும் கான்பெட் நிறுவன அலுவலக வளாகம், புதுச்சேரி கொக்கு பார்க் மைதானம், காரைக்கால் ஆகிய 3 இடங்களில் பட்டாசு விற்பனை செய்தது. இந்தாண்டு மொத்தமாக ரூ.2.30 கோடிக்கு பட்டாசு விற்பனையானதில், கான்பெட்டிற்கு கமிஷன் தொகையாக மட்டும் 70 லட்சம் ரூபாய் கிடைத்ததாக மேலாண் இயக்குனர் ஐயப்பன் கூறினார். மேலும் புதுச்சேரி நியாய விலை கடை ஊழியர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில், அரியாங்குப்பம், திருக்கனுார், ரெட்டியார்பாளையம், லாஸ்பேட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடைகளில் ரூ.1 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி