உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காங்., சட்டப்பிரிவு சார்பில் அரசியலமைப்பு தின விழா

 காங்., சட்டப்பிரிவு சார்பில் அரசியலமைப்பு தின விழா

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., சட்டப்பிரிவு சார்பில், அரசியலமைப்பு தின விழா கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமை தாங்கினார். சட்டப் பிரிவு தலைவர் வழக்கறிஞர் மருதுபாண்டியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக அகில இந்திய காங்., செயலரும், புதுச்சேரி காங்., பொறுப்பாளர் பிரதாபன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் அரசியலமைப்பு குறித்து பேசினார். விழாவில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், வழக்கறிஞர் பிரிவு தேர்தல் பொறுப்பாளர் ராமலிங்கம், வழக்கறிஞர்கள் விநாயகமூர்த்தி, ரோசலி ஜட்சன், கோவிந்தராசு ஆகியோர் கருத்துரை வழங்கினர். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக்கேயன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, வழக்கறிஞர்கள் இளையராஜா, சுந்தரவிநாயகம், சுரேஷ், ஊதர்பாபு, தமிழ்நாடு மீனவர் காங்., ஜோடன், மகளிர் காங்., தலைவி நிஷா, மாநில பொதுச் செயலாளர்கள் விஜயகுமாரி, செயற்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, ஜெயமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் அரசியலமைப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைமை வழக்கறிஞர் சாமிநாதன், பிரதீஷ், இருதயராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை