புனித சூசையப்பர் மருத்துவமனையில் தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கம்
புதுச்சேரி: புனித சூசையப்பர் (குளூனி) மருத்துவமனையில் 162-வது தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கம் நடந்தது.மருத்துவமனையின் திட்ட இயக்குநர் ரங்கநாத் நோக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினர் சுகாதார துறை முன்னாள் இயக்குநர் திலீப்குமார் பாலிகா கலந்துரையாடினார்.மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், மருத்துவ பயிற்சிகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.கருத்தரங்கில் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை பட்ட மேற்படிப்பு நிறுவனம், அரசு மகப்பேறு மருத்துவமனை, மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, காமராஜர் மருத்துவ கல்லுாரி, அறுபடை வீடு மருத்துவ கல்லுாரி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர்.ஆயுர்வேத, சித்தா, ேஹாமியோபதி மருத்துவ நிபுணர்கள், புனித சூசையப்பர் மருத்துவமனையை சேர்ந்த சகோதரிகள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர் திலீப்குமார் பாலிகாவிற்கு, முன்னாள் சுகாதார துறை இயக்குநர் ராமன் நினைவு பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ரங்கநாத் செய்திருந்தார். கந்தசாமி நன்றி கூறினார்.