உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெயிண்டருக்கு வெட்டு நண்பருக்கு வலை

 பெயிண்டருக்கு வெட்டு நண்பருக்கு வலை

பாகூர்: நண்பரை கத்தியால் வெட்டிவரை போலீசார் தேடி வருகின்றனர். பாகூர் அடுத்த மேல்பரிக்கல்பட்டு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 35; பெயிண்டர். இவரது நண்பர் கீழ்பரிக்கல்பட்டை சேர்ந்த சுரேஷ்குமார். கடந்த ஓராண்டுக்கு முன், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து விட்டனர். நேற்று முன்தினம் மாலை ஜெயக்குமார், வீட்டின் அருகே மாரியம்மன் கோவில் வாசலில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த சுரேஷ்குமார், ஜெயக்குமாரை பார்த்து முறைத்தார். அதற்கு, ஜெயக்குமார், ஏன் முறைக்கிறாய் என்று கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜெயக்குமாரை வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த ஜெயக்குமார், பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி