மேலும் செய்திகள்
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
1 minute ago
குட்கா விற்றவர் கைது
5 minutes ago
புதுச்சேரி : நுாறடிச்சாலை நடேசன் நகர் சந்திப்பு அருகே போலீசார் அமைத்த பேரிகார்டுகளை நீக்கி விட்டு குறுக்கே புகும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி நுாறடிச்சாலை, இந்திரா சிக்னலில் இருந்து ரயில்வே மேம்பாலம் வரையிலான பகுதியில் 2 இடைவெளி வழியாக வாகனங்கள் குறுக்கே புகும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதனால் காமாட்சி ஓட்டல் எதிரில் உள்ள இடைவெளி சிமென்ட் கட்டை மூலம் நிரந்தரமாக மூடப்பட்டது. நடேசன் நகர் சந்திப்பு எதிரில் இருந்த இடைவெளியை வடக்கு போக்குவரத்து போலீசார் பேரிகார்டு மூலம் அடைத்தனர். இதனால் விபத்துக்கள் பெருமளவு குறைந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக போலீசார் அமைத்த பேரிகார்டுகளை நீக்கி விட்டு இடைவெளி வழியாக இரு சக்கர வாகனங்கள் புகுந்து செல்கின்றன. இதனால் இந்திரா சிக்னலில் இருந்து மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்களும், மேம்பாலத்தில் இருந்து சிக்னல் நோக்கி வரும் வாகனங்களும், சாலை குறுக்கில் புகும் பைக்குகள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நடேசன் நகர் சந்திப்பில் உருவாக்கி உள்ள இடைவெளியை நிரந்தரமாக மூட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1 minute ago
5 minutes ago