உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகளுக்கு நிச்சயதார்த்தம் தந்தை திடீர் தற்கொலை

மகளுக்கு நிச்சயதார்த்தம் தந்தை திடீர் தற்கொலை

புதுச்சேரி: மகள் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குருசுக்குப்பம் தில்லை நாடார் வீதியைச் சேர்ந்தவர் எதுவார், 56; வெளிநாடு வேலைக்கு சென்று தற்போது வீடு திரும்பியுள்ளார். இவரது மூத்த மகள் நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்து, இரவு 9:00 மணிக்கு வீட்டில் உள்ள அவரது அறைக்கு துாங்க சென்றார். நள்ளிரவு வரை அவரது அறையில் மின் விளக்கு எறியவே, அவரது மனைவி சித்தி அலீமா சென்று பார்த்தார். அப்போது எதுவார் அவரது அறையில் உள்ள மின்விசிறியில் வேட்டியால் துாக்கிட்டு தொங்கினார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் சோலை நகர் புறக்காவல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ