உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவிக்கு கொலை மிரட்டல்; வாலிபருக்கு போலீஸ் வலை

மாணவிக்கு கொலை மிரட்டல்; வாலிபருக்கு போலீஸ் வலை

புதுச்சேரி : மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 17ம் தேதி மதியம் தோழிகளுடன் பாரதி பூங்காவில் பாணி பூரி சாப்பிட்டு கொண்டிருந்தார். அங்கு வந்த நெல்லித்தோப்பு முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த சாம்பசிவம் மகன் முரளி, 23, என்பவர் மாணவியிடம் ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என, கேட்டு அவரை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து முரளியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை