உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்

புதுச்சேரி: மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பினை சமூக சேவகர் சசிபாலன் வழங்கினார்.உழவர்கரை தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, மூலக்குளம் சமுதாய நலக்கூடம் அருகில் நடந்தது. சமூக சேவகர் சசிபாலன் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் அந்தோனிராஜ் பங்கேற்றார். மேலும், சசிபாலன், உழவர்கரை தொகுதியை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.நிகழ்ச்சியில், எல்லைமாரியம்மன் கோவில் நிர்வாகி சேகர், பெருமாள், வீரசெல்வம், முத்துக்குமரன், ஹரி, குப்புசாமி வீரமுத்துகுமரன், தொகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மணிவண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி