உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மில் தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க கோரிக்கை

மில் தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க கோரிக்கை

புதுச்சேரி: ஏ.எப்.டி., சுதேசி, பாரதி மில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை வழங்கிட வலியுறுத்தி, பஞ்சாலை ஓய்வு பெற்ற தொழிலாளர் கூட்டமைப்பினர், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., செல்வம் தலைமையில், புதுச்சேரி பஞ்சாலை ஓய்வு பெற்ற தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், முதல்வர் ரங்கசாமி மற்றும் தொழில்துறை அமைச்சரை சந்தித்து பேசினர்.  அப்போது, ஏ.எப்.டி., தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சம்பள நிலுவை தொகை, சுதேசி, பாரதி மில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகைகள், அத்துடன் தற்போது பணியில் இருக்கும் வாட்ச்மேன்களுக்கான நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என, வலியுறுத்தினர். இது தொடர்பாக, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக முதல்வரும், தொழிற்துறை அமைச்சரும் உறுதி அளித்தனர். இந்த பேச்சு வார்த்தையின் போது, தொழிற்சங்க தலைவர்கள் குப்புசாமி, பாலா, பரமசிவம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை