மேலும் செய்திகள்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
22-May-2025
திருபுவனை : புதுச்சேரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மண்ணாடிப்பட்டு இடை கமிட்டி மாநாடு திருவாண்டார்கோயிலில் நடந்தது. மாநாட்டிற்கு மண்ணாடிப்பட்டு கமிட்டி தலைவர் சிவசங்கரி, கமிட்டி உறுப்பினர் தவமணி ஆகியோர் தலைமை தாங்கினர். செயலாளர் அமிர்தவள்ளி, கமிட்டி உறுப்பினர் திரிபுரசுந்தரி முன்னிலை வகித்தனர். பொருளாளர் புவனேஸ்வரி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் இளவரசி துவக்கவுரையாற்றினார்.மண்ணாப்பட்டு கமிட்டி செயலாளர் உமாசாந்தி செயல் அறிக்கை வாசித்தார்.மாநில தலைவர் முனியம்மாள் கருத்துரை வழங்கினார்.அன்புமணி, வினாயகம், தட்சணாமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணை தலைவர் சத்தியா மாநாட்டு தீர்மானங்களை வாசித்தார்.ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வழங்க வேண்டும்.மண்ணாடிப்பட்டு கொம்யூன் முழுவதும் இயங்கும் தொழிற்காலைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். ரெஸ்டோ பார்களை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
22-May-2025