உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையம் சார்பில், டெங்கு எதிர்ப்பு மாதத்தையொட்டி, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை தலைமையாசிரியர் லட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். சமுதாய நலவழி மைய பொறுப்பு மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கி, டெங்கு நோய் பரவுவதற்கான காரணங்கள் மற்றும் அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். ஊர்வலத்தில், மாணவர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர், உதவியாளர்கள், பொது சுகாதார செவிலியர், கிராமப்புற செவிலியர், ஆசிரியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை