மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு
20-Aug-2025
திருக்கனுார் : புதுச்சேரி நலவழித்துறை, தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் சோரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஊர்வலத்திற்கு தலைமை ஆசிரியர் பசுலுதீன் தலைமை தாங்கினார். விழிப்புணர்வு ஊர்வலத்தை செல்லிப்பட்டு துணை சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி நிமிலி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், சுகாதார ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை சுகாதார உதவியாளர்கள் காசிமுனியன், ராஜவேலு மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
20-Aug-2025