உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல் மருத்துவ முகாம்

பல் மருத்துவ முகாம்

புதுச்சேரி : லாஸ்பேட்டை, பெத்துச் செட்டிப்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி எலைட்ஸ் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது.இதில் வட்டம் -1, பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன் முன்னிலை வகித்தார். முகாமை ரோட் டரி கிளப் தலைவர் சந்திர சேகரன் ஒருங்கிணைத்தார். டாக்டர் விஜயகுமார் தலைமையில், எவர் ஸ்மைல்ஸ் பல் மருத்துவமனை குழுவினர் பங்கேற்றனர்.முகாமில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர்.ரோட்டரி கிளப் செயலாளர் மோகன்ராஜ், பொரு ளாளர் பிரகாஷ், உறுப்பினர்கள் குணசேகரன், சுந்தரவதனன், பாரதி, ராம லிங்கம், சரண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை தமயந்தி ஜாக்குலின், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை