உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரியில் 1ம் எண் கூண்டு ஏற்றம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரியில் 1ம் எண் கூண்டு ஏற்றம்

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் - வடக்கு ஒடிசா கடலோரப் பகுதியை நோக்கி நகர கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்கால் துறை முகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !