மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
புதுச்சேரி : கரையாம்புத்துார், மணமேடு கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சட்டசபையில் நடந்தது.புதுச்சேரி, நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மணமேடு, கரையாம்புத்துார், பனையடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் பஸ் வசதி இல்லாததால், பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். இப்பகுதியில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி துணை சபாநாயகர் ராஜவேலுவிடம் தொகுதி மக்கள் மனு அளித்தனர்.இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் துணை சபாநாயகர் தலைமையில் சட்டசபை வளாகத்தில் நடந்தது. பி.ஆர்.டி.சி., இயக்குனர் சிவக்குமார், தனியார் பஸ் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பாகூர் வழியாக கரையாம்புத்துார் பகுதிக்கும், நெட்டப்பாக்கம் வழியாக கரையாம்புத்துார் பகுதிக்கும் பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்க நவடிக்கை எடுப்பதாக பி.ஆர்.டி.சி., இயக்குனர் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் உறுதியளித்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago