உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெட்டப்பாக்கம் பகுதியில் துணை சபாநாயகர் ஆய்வு

நெட்டப்பாக்கம் பகுதியில் துணை சபாநாயகர் ஆய்வு

நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார், மணமேடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை துணை சபாநாயகர் ராஜவேலு, வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.நெட்டப்பாக்கம் தொகுதி, பண்டசோழநல்லுார், மணமேடு, மடுகரை, கரையாம்புத்துார் மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. பாதிப்படைந்த நெற்பயிர்களை தொகுதி எம்.எல்.ஏ., துணை சபாநாயகர் ராஜவேலு, கரியமாணிக்கம் வேளாண் அலுவலர் திருநாடன் தலைமையிலான வேளாண் குழுவினர் ஆய்வு செய்தனர். பின் சேதத்திற்கு ஏற்றவாறு நஷ்ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை