உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடற்புழு நீக்க விழிப்புணர்வு முகாம்

குடற்புழு நீக்க விழிப்புணர்வு முகாம்

நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், குடற்புழு நீக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது. கரிக்கலாம்பாக்கம் சுகாதார நலவழி மையம் சார்பில் நடந்த முகாமிற்கு, பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். பள்ளி பொறுப்பாசிரியர் ஸ்ரீதரன், பள்ளி தலைமையாசிரியர் குணச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை செவிலியர் தேவி குடற்புழு மாத்திரையின் அவசியத்தை மாணவ மாணவிகளுக்கு விளக்கினார். தொடர்ந்து பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திட்ட அலுவலர் ராஜ பிரபா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ