உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாத யாத்திரை குழுவினருக்கு புதுச்சேரியில் உபசரிப்பு

பாத யாத்திரை குழுவினருக்கு புதுச்சேரியில் உபசரிப்பு

புதுச்சேரி : வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. செப்டம்பர் 8ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழாவில் பங்கேற்பதற்காக, கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம் இருந்து பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். சென்னை, காஞ்சிபுரம், மகாபலிபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு செல்கின்றனர். தொடர் பாதயாத்திரை மேற்கொள்பவர்கள் கடந்த நான்கு நாட்களாக புதுச்சேரி வழியாக வேளாங்கண்ணிக்கு அணி அணியாக செல்கின்றனர். சென்னையிலிருந்து 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்லும் கிறிஸ்தவர்களுக்கு புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் தன்னார்வலர்களின் மூலம் உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ